X

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – ஜாம்பவான்கள் இல்லாமல் களம் இறங்கும் இங்கிலாந்து

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டரசன், ஸ்டூவர்ட் பிராட் இடம் பிடித்திருந்தார்கள். இருவரும்தான் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் முக்கிய தூண்கள்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் இந்தியா 1 விக்கெட்டை இழந்தது. அந்த விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். இருவரும் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள்.

இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் இருவரும் களம் இறங்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருவரும் களம் இறங்காவிட்டால், ஒல்லி ராபின்சன்தான் பந்து வீச்சுக்கு தலைமை தாங்குவார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாமல் இங்கிலாந்து அணி களம் இறங்கினால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.