இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி – இந்தியா 387 ரன்கள் குவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி விபரம்-
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகுர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ் விபரம்:-
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், லீவிஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல், கரி பியர்.
இதில் இந்தியா 388 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீசிற்கு நிர்ணயித்துள்ளது.