X

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – நியூசிலாந்து சாதனை வெற்றி

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 347 ரன்கள் குவித்தது. அதன்பின் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ராஸ் டெய்லர் – டாம் லாதம் ஜோடி 138 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. ராஸ் டெய்லர் 109 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதற்கு முன் நியூசிலாந்து 2007-ல் ஹாமில்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலா் 347 இலக்கை எட்டிப்பிடித்ததுதான் அந்த அணியின் அதிகபட்ச சேஸிங்காக இருந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 348 இலக்கை எட்டிப்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

2007-ல் ஆக்லாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 337 ரன்களும், 2018-ல் டுனெடினில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 336 இலக்கையும் எட்டிப்பிடித்துள்ளது.

Tags: sports news