Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்காவே ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவும் சிறந்த அணியாக விளையாட வில்லை. ஆனாலும் நிலைமைகள் இன்னும் அவர்களுக்கே சாதகமாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.

இந்த முழு தொடரிலும் இந்தியாவைவிட தென் ஆப்பிரிக்காவே சற்று ஆதிக்கம் செலுத்தும் என்று நான் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். இது தவறாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு பல போட்டிகள் சாதகமாகவே இருக்கும். மொத்தமுள்ள 8 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.