Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஓருநாள் கிரிக்கெட் தொடர் – வங்காளதேச அணிக்கு கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.