இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
வெள்ளை பந்து போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவருக்கு பதில் கே.எல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய வீரரான ககிசோ ரபாடா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ’ரபாடா தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.’ என தெரிவித்துள்ளது.