X

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்!

இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 , 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நாளை (புதன்கிழமை) இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது கேன் வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில், தோள்பட்டை காயம் குணமாகாததால், இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

ஏற்கனவே நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், கேன் வில்லியம்சன் விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நியூஸிலாந்து அணிக்கு கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சேப்மேன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: sports news