இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலையில் டால் முகாம் அருகே சில நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடியதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இதனால் உஷாரான வீரர்கள், அந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுவதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஊடுருவ முயன்ற நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது