இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கான ஹஜ் விமானம் இயக்கம்

டாடா குழுமத்தின் சர்வதேச பட்ஜெட் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஏஐஎக்ஸ்எல்) நேற்று இந்தியாவின் முதல் முழு பெண் ஹஜ் விமானத்தை இயக்கியது. இதில் சுமார் 145 பெண் யாத்ரீகர்கள் பயணித்தனர். இந்த சிறப்பு விமானத்தின், அனைத்து முக்கியமான விமானப் பணிகளிலும் முழுக்க முழுக்க பெண் குழுவினர் ஈடுபட்டுனர். இது இந்திய ஹஜ் கமிட்டியின் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்தது.

முதல் முழு பெண் ஹஜ் விமானம் IX 3025, கோழிக்கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு ஜெட்டாவை வந்தடைந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது. விமானத்தில், விமானி கனிகா மெஹ்ரா மற்றும் முதல் அதிகாரி கரிமா பாசி ஆகியோருடன் கேபின் குழு உறுப்பினர்களான பிஜிதா எம்பி, ஸ்ரீலட்சுமி, சுஷ்மா சர்மா மற்றும் சுபாங்கி பிஸ்வாஸ் ஆகியோர் இருந்தனர்.

இதைத்தவிர, விமானத்தின் உள்ளே மட்டுமல்லாமல் விமானத்திற்கான தரை செயல்பாடுகள் மற்றும் விமான பராமரிப்பு பணிகளும் பெண் பணியாளர்களால் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools