Tamilசெய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு – கடுப்பாடுகளை கடைபிடிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது, கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி 1000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அண்மையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தடுப்பு நடவடிக்கைகயை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தடுப்பூசி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.