இந்தியாவில் புதிதாக 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாட்டில் புதிதாக 9,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,972 பேர் அடங்குவர்.
மொத்த பாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 370 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 437 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,66,584 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பை விட நாள்தோறும் தொற்று பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில் நேற்று 10,949 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 698 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,11,481 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது கடந்த 537 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில், அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 53,350 பேர் உள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று 76,58,203 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 118 கோடியே 44 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கிடையே நேற்று 11,57,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 63.47 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.