இந்தியாவில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 74 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 14,539, மகாராஷ்டிராவில் 7,243, -ஆந்திராவில் 2,567, தமிழ்நாட்டில் 2,505, அசாமில் 2,169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 196, கேரளாவில் 124 பேர் உள்பட நாடு முழுவதும் 624 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,11,408 ஆக உயர்ந்தது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,26,220, கர்நாடகாவில் 35,944, தமிழ்நாட்டில் 33,502, டெல்லியில் 25,020, உத்தரபிரதேசத்தில் 22,704 பேர் அடங்குவர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 41,000 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 4 ஆயிரத்து 720 ஆக உயர்ந்தது. தற்போது 4,29,946 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37,14,441 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இதுவரை 38.76 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.