நாடு முழுவதும் புதிதாக 21,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 3 நாட்களாக பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, நேற்று 21,880 ஆக இருந்தது.
இந்நிலையில் புதிய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 68 ஆயிரத்து 476 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 67 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,25,997 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 20,726 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்ககை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,50,100 ஆக உயர்ந்துள்ளது.
இது நேற்றை விட 618 அதிகம் ஆகும். நாடு முழுவதும் இதுவரை நேற்று 34,93,209 டோஸ்களும், இதுவரை 201 கோடியே 68 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 87.21 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,80,202 மாதிரிகள் அடங்கும்.