நாட்டில் புதிதாக 20,409 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. 3 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று 20 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அதாவது நேற்று 20,557 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 79 ஆயிரத்து 730 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 47 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,26,258 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 22,697 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,43,988 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,335 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 38,63,960 டோஸ்களும், இதுவரை 203 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 3,98,761 மாதிரிகள் பரிசோதனைகளும், இதுவரை 87.44 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.