இந்தியாவில் புதிதாக 17,070 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
கடந்த 28-ந்தேதி பாதிப்பு 11,793 ஆக இருந்தது. மறுநாள் 14,506 ஆகவும், நேற்று 18,819 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,083 பேர், மகாராஷ்டிராவில் 3,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 1,524, கர்நாடகாவில் 1,046, டெல்லியில் 865, குஜராத்தில் 547 அரியானாவில் 534, தெலுங்கானாவில் 468, உத்தரபிரதேசத்தில் 437 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 234 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 15 மரணங்கள் உள்பட மேலும் 23 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,139 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 14,413 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக உயர்ந்தது.
தற்போது 1,07,189 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,634 அதிகம் ஆகும். நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 74 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 11,67,503 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 5,02,1510 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.28 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.