இந்தியாவில் புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 863 பேர் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலன் இன்றி 327 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 10.21 சதவிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 3,44,53, 60 பேர் சிகிக்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 4,83,790 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 151கோடிய 58 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.