இந்தியாவில் புதிதாக 15,528 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. 4 நாட்களாக பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 16,935 ஆக குறைந்தது.

இந்நிலையில் 2-வது நாளாக பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 62 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் மேலும் 25 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,785 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 16,113 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 623 ஆக உயர்ந்தது. தற்போது 1,43,654 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 200 கோடியே 33 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 27,78,013 டோஸ்கள் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 87.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,68,350 மாதிரிகள் அடங்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools