இந்தியாவில் புதிதாக 10,725 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாடு முழுவதும் புதிதாக 10,725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
நேற்று பாதிப்பு 10,649 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரத்து 920 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 13,084 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 385 ஆக உயர்ந்தது.
தற்போது 94,047 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,395 குறைவாகும். தொற்று பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,488 ஆக உயர்ந்தது.