இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக குறைந்தது
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இரு நாட்களாக 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 35 ஆயிரமாக குறைந்துள்ளது.
இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,342 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 93 ஆயிரத்து 62 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 12,818, மகாராஷ்டிராவில் 7,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 120, கேரளாவில் 122 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்ற 483 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,19,470 ஆக உயர்ந்தது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,31,038, கர்நாடகாவில் 36,293, தமிழ்நாட்டில் 33,838, டெல்லியில் 25,040, உத்தரபிரதேசத்தில் 22,743 பேர் அடங்குவர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 38,740 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம்அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயி ரத்து 79 ஆக உயர்ந்தது.
தற்போதைய நிலவரப்படி 4,05,513 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று காலை 7 மணி வரையிலான நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 54,76,423 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 42.34 கோடியாக உயர்ந்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நாடு முழுவதும் இதுவரை 45.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுளது.
இதில் நேற்று மட்டும் 16,68,561 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.