மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,09,918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய அளவை விட 24,363 குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் 959 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,62,628 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர். இதுவரை 18,31,268 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா பரவும் விகிதம் 15.77 சதவீதமாக உள்ளது. மொத்தம் 166,039,6,227 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.