Tamilசெய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்தது!

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,85,914 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று காலை 2,55,874 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று 2.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தினசரி பாதிப்பு விகிதம் 16.16 சதவீதமாகவுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 85 ஆயிரத்து 116-ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 665 பேர் இறந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மொத்த மரணம் 4 லட்சத்து 91 ஆயிரத்து 127-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 2,99,073 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 73 லட்சத்து 70 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 22,23,018 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.