Tamilசெய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.06 லட்சமாக குறைந்தது

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக சரிந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,06,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 20-ம் தேதி நிலவரப்படி பாதிப்பு 3.47 லட்சமாக இருந்த நிலையில் 4 நாட்களில் வெகுவாக குறைந்து 3.06 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் தினசரி பாதிப்பு விகிதம் 17.78 சதவீதத்தில் இருந்து 20.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 439 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 848 பேர் இதுவரை கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 2,43,495 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 04 ஆயிரத்து 145 ஆக உயர்ந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,49,335 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 14,74,753 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 71.59 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.