Tamilசெய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1,12,62,707 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 9,927, கேரளாவில் 2,316, பஞ்சாபில் 1,027 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 590, தமிழ்நாட்டில் 569, குஜராத்தில் 581, சத்தீஸ்கரில் 390, அரியானாவில் 336, பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மராட்டியத்தில் 22,38,398, கேரளாவில் 10,81,055, கர்நாடகாவில் 9,56,041, ஆந்திராவில் 8,90,884, தமிழ்நாட்டில் 8,56,246, டெல்லியில் 6,41,660, உத்தரபிரதேசத்தில் 6,04,527, மேற்கு வங்கத்தில் 5,77,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மராட்டியத்தில் 56, பஞ்சாபில் 20, கேரளாவில் 16 பேர் உள்பட நாடு முழுவதும் 133 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,58,063 ஆக உயர்ந்தது. இதில் மராட்டியத்தில் 52,556, கேரளாவில் 4,328, கர்நாடகாவில் 12,373, ஆந்திராவில் 7,176, தமிழ்நாட்டில் 12,525, டெல்லியில் 10,928, உத்தரபிரதேசத்தில் 8,740 பேர் அடங்குவர்.

மேற்கு வங்கத்தில் 10,281, ராஜஸ்தானில் 2,789, சத்தீஸ்கரில் 3,864, குஜராத்தில் 4,418, அரியானாவில் 3,062, மத்திய பிரதேசத்தில் 3,874, பஞ்சாபில் 5,961 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மராட்டியத்தில் 12,182, கேரளாவில் 4,386 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 20,652 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,20,046 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும் 1,84,598 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மராட்டியத்தில் மட்டும் 96,548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 22.34 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 7,63,081 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.