இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,284, டெல்லியில் 1,634, அரியானாவில் 839, மகாராஷ்டிராவில் 650, உத்தரபிரதேசத்தில் 706, தமிழ்நாட்டில் 514 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 27 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,313 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 35 ஆயிரத்து 772 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 60,313 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 2,771 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத்தில் 6 பேர், ராஜஸ்தானில் 3 பேர், உத்தபிரதேசத்தில் 4 பேர் உள்பட 24 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 3-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools