Tamilசெய்திகள்

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தது – மத்திய அரசு தகவல்

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் மேலும்  2,35,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய அளவை விட 15,677 குறைவாகும்  கடந்த 24 மணி நேரத்தில் 871  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,35,939 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். கொரோனா  பாதிப்புக்கு இதுவரை  20,04,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா பரவும் விகிதம் 13.39 சதவீதமாக உள்ளது. மொத்தம் 165,04,87,260 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.