இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,813 ஆகவும், நேற்று 9,062 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,608 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,800, டெல்லியில் 1,652, கேரளாவில் 1,151 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 864 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 72 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,27,206 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 16,251 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 315 ஆக உயர்ந்தது. தற்போது 1,01,343 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,715 குறைவு ஆகும்.