இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 12,751 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,782, கர்நாடகாவில் 1,608 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரத்து 697 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,539 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரத்து 610 ஆக உயர்ந்தது. தற்போது 1,28,261 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சிசை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,546 குறைவு ஆகும். தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 54 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,826ஆக உயர்ந்துள்ளது.