இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தபோதிலும், குணமடையும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் தினசரி தொற்று எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டிய நிலையில், அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது.
தற்போது அதிக அளவிலான பரிசோதனைகள் செய்யப்பட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 9.32 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
இதுதொடர்பான புள்ளிவிவர வரைபடத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.