X

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 38 ஆயிரத்து 310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்து 67 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 323 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76 லட்சத்து 3 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.