Tamilசெய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,90,89,069 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2219 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,53,528 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,75,04,126 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,62,664 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.22 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 12,31,415 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,90,58,360 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 37,01,93,563 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 19,85,967 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.