இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 422 ஆக உயர்வு!
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 130 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேலும் 6,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,091 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 162 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 76,766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.