இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 4,90,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 407 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15301 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,85,637 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அந்தமான் நிகோபார் தீவுகள் – 59
ஆந்திர பிரதேசம் – 10884
அருணாச்சல பிரதேசம் – 160
அசாம் – 6321
பீகார் – 8473
சண்டிகர் – 423
சத்தீஸ்கர் – 2452
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 155
டெல்லி – 73780
கோவா – 995
குஜராத் – 29520
அரியானா – 12463
இமாச்சல பிரதேசம் – 839
ஜம்மு – காஷ்மீர்- 6549
ஜார்க்கண்ட் – 2262
கர்நாடகா – 10560
கேரளா – 3726
லடாக் – 941
மத்திய பிரதேசம் – 12596
மகாராஷ்டிரா – 147741
மணிப்பூர் – 1056
மேகாலயா – 46
மிசோரம் – 145
நாகலாந்து – 355
ஒடிசா – 5962
புதுச்சேரி – 502
பஞ்சாப் – 4769
ராஜஸ்தான் – 16296
சிக்கிம் – 85
தமிழ்நாடு – 70977
தெலுங்கானா – 11364
திரிபுரா – 1290
உத்தரகாண்ட் – 2691
உத்தர பிரதேசம் – 20193
மேற்கு வங்காளம் – 15648
மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-8123
மொத்தம் – 490401.