X

இந்தியாவில் இன்று புதிதாக 30,757 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்தபாதிப்பு 4 கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 315 ஆக உயர்ந்தது.

தினசரி பாதிப்பு விகிதம் 2.45 சதவீதத்தில் இருந்து 2.61 ஆக உயர்ந்தது. அதே நேரம் வாராந்திர பாதிப்பு விகிதம் 3.32 சதவீதத்தில் இருந்து 3.04 ஆக குறைந்துள்ளது.

நேற்றைய பாதிப்பில் கேரளாவில் மட்டும் சுமார் 40 சதவீதம் பதிவாகி உள்ளது. அதாவது நேற்று கேரளாவில் மட்டும் 12,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 2,748, கர்நாடகாவில் 1,894, தமிழ்நாட்டில் 1,310, ராஜஸ்தானில் 1,702, மத்திய பிரதேசத்தில் 1,388 மிசோரத்தில் 1,571 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 338 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 541 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்தபலி எண்ணிக்கை 5,10,413 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 67,538 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,32,918 ஆக சரிந்துள்ளது. இது நேற்றுமுன்தினத்தை விட 37,322 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு 174 கோடியே 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 34,75,951 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 11,79,705 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை 75.55 கோடியாக உயர்ந்துள்ளது.