Tamilசெய்திகள்

இந்தியாவிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை – முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்

ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது. ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

இந்த சிலை இந்தியாவிலேயே உயரமான சிலை என்ற பெருமைக்குரியதாக திகழ்க்கிறது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.