இந்தியாவின் 75 வது குடியரசு தினம் – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து
நாட்டின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், குடியரசு தினம் கொண்டாடும் இந்தியாவுக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் உலகின் அதிக சவாலான விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து எதிர்நோக்குகிறது என தெரிவித்தார்.
“காமன்வெல்த்-இன் 75-வது ஆண்டு விழாவில் நமது உறவு மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன். இது நம்மை ஒன்றிணைக்கும் நிலையான மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் பொருத்தமான நினைவூட்டல் ஆகும். உலகின் கடினமான சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள நமது நாடுகள் தொடர்ச்சியாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்,” என்று மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.