Tamilசெய்திகள்

இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின்னர் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி,

* இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது.

* திருவள்ளுவர் தொடங்கி பாரதியார் வரை பல்வேறு இலக்கியங்களை நமக்கு கொடுத்துள்ளனர்.

* தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் நான் புதிய சக்தியை பெறுகிறேன்.

* உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

* திருச்சியில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்களின் வரலாற்று சுவடுகள் உள்ளன.

* புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

* எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழின் பெருமையை பேசாமல் நான் வருவதில்லை.

* காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன.

* 40 மத்திய அமைச்சர்கள் 400 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

* பெரிய பெரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.

* புதிய விமான முனையத்தால், திருச்சியை சுற்றி வளர்ச்சி, வணிகம் பெருகும்.

* மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் திகழ்கிறது.

* கட்டுமானம், சமூக சட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளோம்.

* சாலை கட்டமைப்பு வசதிகளால், வணிகம், சுற்றுலா தமிழகத்தில் பெருகும்.

* புதிய சாலை திட்டங்களால் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் பயன்பெறும்.

* துறைமுக கட்டமைப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

* மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

* மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

* சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்களை சிறந்த சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.