X

இந்தியாவின் மோசமான முதல்வர் பினராயி விஜயன்! – கூகுள் தகவலால் அதிர்ச்சி

சர்வதேச அளவில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் இணைய தளத்தைத்தான் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

இதற்காக கூகுள் இணைய தளம் புதுப்புது தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மோசமான மாநில முதல்வர் யார்? என்று தேடினால் அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் வருகிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கு அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேரளாவில் வன்முறை, கலவரங்கள் நடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.