X

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் முனையத்தின் வீடியோவை வெளியிட்டார் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள “சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப்” என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் முனையத்தின் வீடியோவை ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று வெளியிட்டார்.

இந்த முனையம் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட ரெயில்வே அமைச்சர்,”இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலுக்கான முனையம். சபர்மதி மல்டிமாடல் போக்குவரத்து மையம், அகமதாபாத்,” என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வெளியானதில் இருந்து 565,000க்கும் அதிகமான பார்வைகளையும் 20,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

மேலும், குஜராத்தில் உள்ள பிலிமோரா மற்றும் சூரத் இடையேயான 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடையும் என்று ரெயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.

Tags: tamil news