Tamilசெய்திகள்

இந்தியாவின் ஜூன் மாத ஏற்றுமதி 13 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் ஒட்மொத்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 60.09 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா 69.20 அமெரிக்க டாலர் அளவில் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் தற்போது 13 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இந்த குறைவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளது. 2022 ஜூன் மாதத்தில் 80.12 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்த இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 14 சதம்வீதம் குறைத்து 68.98 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது.

இறக்குமதி ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசம் 10.92 பில்லியனில் இருந்து 8.89 பில்லியனாக குறைந்துள்ளது. ஏப்ரல்-ன் காலாண்டில் 182.70 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இது கடந்த ஆண்டை விட 7.29 சதவீதம் குறைவாக ஏற்றுமதி செய்துள்ளது.