இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சி
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபிப்சர் தனது கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் திறன் கொண்டது என அறிவித்தது.
அதேபோல், மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டுள்ளது என நேற்று அறிவித்தது. இதனால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்நிறுவனங்கள் அமெரிக்காவின் மேலும் சில நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகட்ட ஆராய்ச்சியில் உள்ளனர்.
அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, கனடா, பிரான்ஸ், தென்கொரியா உள்பட மேலும் சில நாடுகளை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களை திருட முயற்சிகள் நடப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியா, வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை சைபர் தாக்குதல் மூலம் ஹேக் செய்து கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் உள்ள நிறுவனங்களின் லாக்-இன் கடவு சொல்களை திருட ரஷியாவின் ஸ்ரான்டியம், வடகொரியாவின் சின்ங் மற்றும் செரிம் ஆகிய மூன்று ஹேக்கிங் நிறுவனங்கள் முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.