இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர் – அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலைஞர் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தித்து துணை நின்றவர். கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை. மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்களைக் கொண்டு வந்தவர் கலைஞர்.

தமிழ் இலக்கியம், சினிமாவிற்கு கலைஞர் அளித்த பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools