X

இந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப்! – பிரதமர் மோடி பாராட்டு

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பேசினர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதுபற்றிய கருத்துகளை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

அதில், மோடி கூறியிருப்பதாவது:-

ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில், தாங்கள் (டிரம்ப்) பங்கேற்றது, இந்திய-அமெரிக்க உறவில் எழுச்சியான தருணமாக அமைந்துள்ளது. தாங்கள் பதவி ஏற்றதில் இருந்தே இந்தியாவுக்கும், அமெரிக்க இந்தியர்களுக்கும் உற்ற நண்பனாக திகழ்ந்து வருகிறீர்கள்.

‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டது, இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. நிகழ்ச்சியில், இந்திய கலாசாரத்தையும், இந்தியர்களின் சாதனைகளையும் விளக்கும் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன.

அந்த நிகழ்ச்சி அற்புதமாகவும், முற்றிலும் நேர்மறை அம்சங்கள் கொண்டதாகவும் அமைந்தது. ஹூஸ்டன் நிகழ்ச்சி, என் நினைவை விட்டு எப்போதும் அகலாது.

ஆகவே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.