X

இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன் – அண்ணாமலை கருத்து

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். இந்தித் திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தித் திணிப்பை தமிழக பா.ஜ.க. எதிர்த்துக்
கொண்டுதான் உள்ளது.

இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தித் திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி என்பது விருப்பப்
பாடமாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழி திணிப்பை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்கவேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம்.

கடந்த 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது சி.யு.சி.ஈ.டி (CUCET) தேர்வு கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் – தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத்
தேர்வை தி.மு.க. அரசு எப்படி குறை சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார்.