2.0 படத்தை அடுத்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த படத்தில் மீண்டும் வயதான இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலுக்கு புதிய உடல்மொழி மற்றும் தலைமுடி ஸ்டைலை மாற்றி சமீபத்தில் அதற்கான டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். அந்தவகையில் இந்தியன் படத்தில் நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்தியன் 2 வில் கமல் நடிக்கிறார்.
நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பாரிஸ் நகருக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். அந்த மேக்கப் டெஸ்ட் இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது.