Tamilசினிமா

‘இந்தியன் 2’ படத்தில் விவேக் காட்சிகளை மாற்றம் செய்ய முடிவு?

நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் விவேக் கடைசியாக நடித்த சில படங்கள் பாதியில் நிற்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள் பலத்த யோசனையில் உள்ளனர்.

அப்படி விவேக் நடிப்பில் உருவாகி வந்த மிகப் பெரிய படம்தான் இந்தியன் 2. சங்கர் மற்றும் லைகா கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார் கமல்.

அதுமட்டுமில்லாமல் இதுவரை விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததில்லை என்ற ஆசையை இந்த படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் சில நாட்கள் படமாக்கப்பட்ட விவேக்கின் காட்சிகள் தற்போது அவர் இல்லாததால் அடுத்த கட்டத்தை எப்படி எடுக்கலாம் என்று சிந்தித்து வருகிறார்களாம்.

விவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்பது போல அவரது காட்சியை முடித்து விடலாமா, அல்லது வேறொரு நபரை வைத்து விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள்.