‘இந்தியன் 2’ படத்திற்கு இசையமைக்காதது ஏன்? – விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

‘இந்தியன்’ படத்துக்கு இசை அமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டனர்.

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் பணிபுரியாதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

‘இந்தியன் 2’வில் நான் பணியாற்ற வேண்டும் என்று கமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். டைரக்டர் சொல்லவேண்டும் என்று கூறினேன். ‌ஷங்கர் எப்போதுமே புதிய வி‌ஷயங்களை தேடிச் செல்வார். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் போர் அடித்துவிடும் இல்லையா? ஏற்கனெவே ‘அந்நியன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைப் போல இது ஒரு சிறிய பிரேக். அவ்வளவுதான்’. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தின் மூலம் ஷங்கர், கமல்ஹாசனுடன் முதல்முறையாக அனிருத் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools