X

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’வில் கமல், ‌ஷங்கர் இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதில் ‘இந்தியன்’ படத்தில் கமல் செய்யும் வர்மக் கலைகள் மிகவும் பேசப்பட்டது. அதை முன்வைத்து ‘இந்தியன் 2’ போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு. மேலும், ஜனவரி 18-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவித்துள்ளனர்.

இப்படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே, உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.