அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூகுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்காவின் கோகோ கோப்புடன் மோதினார். இதில் சக்காரி 6-4, 6-7 (5-7) 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக், மரியா சக்காரி ஆகியோர் மோதுகின்றனர்.