இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு பசுமை சீருடை அறிமுகம்

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேருக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த பிரத்யேக பசுமை சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம் ஆண்டுக்கு 20 மில்லியன் அளவிலான சுமார் 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில் அல்லாத பசுமையான எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்யா சீருடையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த பசுமை சீருடை நமது பசுமை சுற்றுச் சூலுக்கான உறுதிப்பாட்டை ஒளிரச் செய்யும் என்றும், முன்கள எரிசக்தி வீரர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools