X

இத்தாலியில் சிக்கி தவித்த 218 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்

இத்தாலி நாட்டில் கொரோனா வைரசுக்கு தினமும் உயிர் பலி அதிகரித்தபடியே இருக்கிறது.

இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் பத்துக்கும் மேற்பட்ட பெருநகரங்களில் வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரோம், மிலன், வெனிஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 175 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் சிக்கித் தவித்த 211 மாணவர்கள் உள்பட 218 இந்தியர்கள் மிலன் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் நகரில் உள்ள ராணுவ கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.